இளையதளபதி விஜய் எப்போதுமே பொது நிகழ்ச்சியில் அமைதியாக இருப்பார். ஆனால் நேற்று நடந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் முரளி ராமசாமியின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு கேக் ஊட்டி விழாவையே கலகலப்பாக்கினார்.

விஜய் மட்டுமின்றி சமந்தாவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு கேக் ஊட்டியதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் ‘தளபதி 61’ படத்தின் இயக்குனர் அட்லியும் கலந்து கொண்டார்

ஒரே நேரத்தில் ‘தளபதி 61’ மற்றும் ‘சங்கமித்ரா’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் முரளி ராமசாமி, இன்னும் ஒருசில சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இதுவரை யாரும் செய்யாத முயற்சியான கேன்ஸ் படவிழாவில் தனது ‘சங்கமித்ரா’ படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.