கோபத்தில் விஜய்: அப்பாவை அவமதித்த எடப்பாடி பழனிச்சாமி?

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தரமான படங்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரனை அவமரியாதை செய்ததாக பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் முதல்வர் மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 149 படங்களுக்கு தலா 7 லட்சம் அரசு மானியத்தை கடந்த 20-ஆம் தேதி வழங்கினார். இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் அந்த மானியம் வழங்கப்பட்டது.

முதல் நபராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து அந்த மானியத்தை வாங்கிய சந்திரசேகரன், முதல்வரிடம் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனை கவனிக்காதது போல அடுத்த நபரை அழைத்ததாக பேசப்படுகிறது. இது முதல்வரிடம் பேச முயன்ற சந்திரசேகரனுக்கு நோஸ் கட்டாக அமைந்தது.

இதனைக்கேள்விப்பட்ட நடிகர் விஜய் தமிழக அரசு மீது கோபமாக இருப்பதாக தகவல் வருகிறது. முதல்நாள் தொலைக்காட்சி பேட்டியில எடப்பாடியை அப்பா விமர்சிச்சாரு. அதனாலதான் அடுத்த நாள் அவர் கையால மானியம் வாங்கப் போனபோது அவமரியாதை பண்ணியிருக்காங்க. இது அப்பாவுக்கு மட்டுமில்ல, எனக்கும் அவமரியாதைதானே என்று தன் அம்மாவிடம் சொல்லி விஜய் வருத்தப்பட்டதாக பேசப்படுகிறது.