விஜய் மனதில் அட்லி இட்லி ஆன கதை

விஜய் தற்போது நடித்துவரும் படத்தை அட்லி இயக்குகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் தற்போது கடும் வெயில் கொளுத்திவருகிறது. இதனால் பாடல் காட்சியை வேறு எங்காவது வைத்துக் கொள்ளலாம் என்று விஜய் கூறியதாகவும் ஆனால் அதனை ஏற்க அட்லி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அட்லி மீது தயாரிப்பாளர் தரப்பிலும் விஜயிடம் புகார் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் விஜய் அட்லி மீது கோபத்தில் உள்ளாராம்.

விஜயின் பரிந்துரையின்பேரிலேயே இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. அதுமட்டுமின்றி முன்னனி நாயகன் பரிந்துரை செய்ததால் தனது சம்பளத்தையும் பயங்கரமாக உயர்த்தி வாங்கியதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.