வணக்கம் சென்னை படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் காளி. விஜய் ஆண்டனி,அஞ்சலி நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.முதலில் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருந்தனர் ஆனால் மார்ச் 1ம் தேதி திரைத்துறையினரின் ஸ்ட்ரைக் நடக்கவிருப்பதால் காளி வெளியீட்டை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படமும் ஏப்ரல் மாதத்தில் வெளிவருகிறது. எனவே காளி காலாவுடன் போட்டியில் இறங்குமா அல்லது முன்னதாகவே வெளிவருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.