பிரபல இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு முதல் நாளே கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக ஓப்பனிங் வசூல் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.

கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆன இந்த படம் ஞாயிறு வரையிலான நான்கு நாட்களில் சென்னையில் ரூ.87,96,304 மட்டுமே வசூல் செய்துள்ளது. விஜய் ஆண்டனியின் முந்தைய படங்கள் சர்வ சாதாரணமாக முதல் நாளே கோடியை நெருங்கிய நிலையில் இந்த படம் நான்கு நாட்கள் ஆகியும் ஒரு கோடி வசூலை நெருங்கவில்லை

‘நான்’ முதல் விஜய் ஆண்டனி நடித்த அனைத்து படங்களும் நல்ல வசூலை குவித்த நிலையில் அவருடைய முதல் ப்ளாப் படமாக இந்த படம் அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது