தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தவர் விஜய் ஆண்டனி. எத்தனை காலத்துக்குதான் இப்படி இசையமைப்பது என்ற எண்ணத்தில் நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்ததால் குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் அண்ணா துரை என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. ரஜினி,கமல்,விஜய் அஜீத் போன்ற நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்பே இரட்டை வேடங்களில் நடித்தனர். அந்த விசயத்தில் மற்ற ஹீரோக்களை பின்னுக்கு தள்ளினார் விஜய் ஆண்டனி.