விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக முதன் முதலில் அஞ்சலி நடித்துள்ளாா். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு நான்கு நாயகிகள் நடிக்கின்றனா்.

ஏற்கனவே இரு நாயகிகளான சுனைனா, படைவீரன் படத்தில் விஜய் யேசுதாசுக்கு ஜோடியாக நடித்த அம்ரிதா ஆகியோா்கள் நடித்து விட்ட நிலையில் மீதி இருக்கிற இரண்டு நாயகிகள் யாராக இருக்கும் என யோசித்த வேளையில் தற்போது அது யாா் என்று தொிந்து விட்டது.

அதில் ஒன்று நம்ம அஞ்சலி தாங்க. மற்றொருவா் கன்னடத்தை சோ்ந்த ஷில்பா மஞ்சுநாத். எதிா்பாராத திருப்பத்தை கதையில் ஏற்படுத்தும் வகையில் அஞ்சலியின் கேரக்டா் அமைந்துள்ளது. சிட்டி பெண்ணாக மஞ்சுநாத் நடித்துள்ளாா். இந்த படத்தில் நான்கு நாயகிகளுக்கும் சாியான அளவு முக்கியத்துவம் கொடுத்து கிருத்திகா உதயநிதி கதையை அமைத்திருக்கிறாா்.