காளி தலைப்பிற்காக ஸ்டண்ட் மாஸ்டருடன் மோதும் விஜய் ஆண்டனி

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி அண்ணாதுரை என்ற படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அந்த படம் தற்காலிகமாக டிராப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த படத்திற்கான தேதிகளை கிருத்திகா உதயநிதிக்கு வழங்கினார் விஜய் ஆண்டனி. காளி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை இசையமைத்து தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி.

காளி ரஜினிகாந்த் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளீவந்த சூப்பர் ஹிட படம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தைப்பை ஏற்கெனவே ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் தனது படத்திற்கு சூட்டியுள்ளார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைக்கூட வெளியிட்டு அதனை ரஜினிக்கும் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் காளி பெயரை விஜய் ஆண்டனி தெரிந்தே வைத்தாரா அல்லது தெரியாமல நடந்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.  இறுதியில் யாருக்கு அந்த பெயர் கிடைக்கும் என்பதை சில நாட்களில் தெரியவந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்.