இப்பொழுதெல்லாம் விஜய் ஆண்டனி என்றால் இசையமைப்பாளர் என்ற அடையாளம் மறைந்து நடிகர் என்ற ஞாபகம் மட்டுமே வருகிறது. காரணம் அவரது தொடர் வெற்றிகள். இ ந் நிலையில் அவர் நடித்து அடுத்து வெளிவரும் படம் எமன்.  ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தை தயாரித்துவரும் லைக்கா புரொடக்சன் டிப்படத்தை தயாரிப்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இயக்கம் நான் வெற்றிப் படத்தை இயக்கிய ஜீவா சங்கர்.

வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில்,

ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும்  கதை எழுதுவேன். அதற்கு பிறகு தான் அதை எப்படி காட்சி படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும்   இருந்து சிந்திப்பேன். எமன் படத்தின் கதையையும் நான் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கின்றேன். ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, சிம்மாசனத்தில்  அமர முயற்சி செய்கின்றான். அதில் அவன் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பது தான் ‘எமன்’ படத்தின் ஒரு வரி கதை.  தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் கொடுத்து, ‘எமன்’ படத்திற்கு புத்துயிர் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘எமன்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் அதை உறுதி செய்வார்கள் என்று கூறுகிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.