விஜய்யும் அட்லியும் ஏற்கவே தெறி,மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள். இந்த இரண்டு திரைப்படங்களுமே ஓரளவு வசூலை பெற்றுக்கொடுத்தது ரசிகர்களுக்கேற்ற கமர்சியல் படமாகவும் வந்தது.

அட்லிக்கு ஏற்கனவே அவரின் ராஜா ராணி பட காலம் தொட்டே ஏதாவது பழைய திரைப்படத்தை பார்த்து அதற்கு பட்டி டிங்கரிங் பார்த்து அதை புதிதாக்குபவர் என்ற பெயர் இருந்து வந்தது.

அவரின் ராஜா ராணி மெளனராகம் எனவும் அவரின் தெறி விஜயகாந்த் நடித்த சத்ரியன் எனவும் அவரின் மெர்சல் தமிழில் வந்த பல படங்கள் எனவும் கருத்து சினிமா ரசிகர்களிடம் உலவியது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவ்வாறு கலாய்க்க தொடங்கி விட்டனர் நீ கதை எல்லாம்  வேண்டாம், படத்தின் பெயரை சொல் நான் நிச்சயம் அதை பார்த்திருப்பேன் என்று விஜய் அட்லியிடம் சொல்வதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் க்ரியேட் செய்கிறார்கள்.

விஜய் அட்லி இணைவு குறித்து பத்திரிக்கைகளும் ரசிகர்களும் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே தமிழில் வந்த படத்தின் உல்டாவாக புதிய படம் இருக்குமா இல்லை இளையதளபதியின் ரசிகர்களுக்காக கதையில் புதிதான திருப்பங்களோடு வித்யாச கதையாக இருக்குமா என இளைய தளபதி ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்