மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விஜய் அவார்ட்ஸ்?

விஜய் அவார்ட்ஸ் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிக பெருமக்களை குஷி படுத்த வருகிறது.பல்வேறு சர்ச்சைக்களால் கடந்த இரு ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது விஜய் டிவி வழங்கும் 10 வது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியானது வருகிற மே 26ம் தேதி ஆரவாரமாக நடைபெற உள்ளது.

விஜய் டிவியில் எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றாலும் அதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. கடந்த இரண்டு வருடங்களாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளை தாண்டி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகை, சிறந்த பாடல், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல விருதுக்கும் ரசிகர்களால் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். சிறந்த நடிகருக்கான விருதுக்கு அஜித், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூரி யார் என்ற விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அவார்ட்ஸ் விருதுகளை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் பட்டியலில் கே.எஸ்.ரவிக்குமார், கே. பாக்யராஜ், யூகி சேது, நடிகை ராதா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நடுவர்கள் பட்டியலில் இன்னொரு முக்கியமான பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யூப் இந்த ஜூரி பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவை பற்றி நிறைய நல்ல கருத்துகளை கொண்டு இருப்பவர். பாலிவுட்டில் பிரபல படங்களான தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் ஆகியவற்றை இயக்கியவர். இவர் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.