விஜய் முதலமைச்சரானால் நான் சந்தோஷப்படுவேன்: சொன்னது யார் தெரியுமா?

11:15 காலை

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரைத் தவிர இதுவரை நடிகர்கள் அரசியலில் இறங்கி வெற்றியை ருசிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. சிவாஜி, விஜயகாந்த் வரை பல நடிகர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தும் அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்நிலையில், நடிகர் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட சிலர் தற்போது அரசியலில் களமிறங்குவது குறித்து சிலர் நேரடியாகவும், ஒருசிலர் மறைமுகமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா திரைப்பட விழா ஒன்றில் நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா துறையில் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சட்டமா உள்ளது? அதேபோல், இவர்தான் வரவேண்டும், இவர் வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா? இது சுதந்திர இந்தியா. யார் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். நல்ல பண்ணனும், தரமாக செய்யவேண்டும். விஜய் எப்போதும் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்பவர். நல்ல எண்ணம் கொண்டவர். அவர் முதலமைச்சராக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களும் விருப்பப்படுகின்றனர். அதேபோல், பொதுமேடைகளிலும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார் விஜய். அரசியலுக்குள் நேரடியாக இறங்குவது பற்றி இதுவரை எந்த கருத்தும் வெளியிடாத விஜய், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் விருப்பத்திற்கு செவி சாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(Visited 49 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com