கடந்த ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் போற்றப்பட்ட பாடல்களில் ஒன்று ஆளப்போறான் தமிழன். இன்றும் அனைத்து விசேஷங்களிலும் இந்த பாடல் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் நேற்று தனது நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ஆச்சரியம் தரும் வகையில் தளபதி விஜய்யிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவர் விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இதுகுறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியபோது

விஜய் அவர்களிடம் இருந்து ஒரு ஆச்சரியமான வாழ்த்து இன்று கிடைத்தது. என்ன ஒரு இனிமையானவர் அவர். அவருடைய இனிய வாழ்த்தால் நெகிழ்ந்து போனேன். என்னுடைய இந்த ஆண்டு பிறந்த நாள் உண்மையிலேயே ஒரு ஸ்பெஷல் தான்.

இவ்வாறு பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்