இளையதளபதி விஜய் ஒவ்வொரு ஆண்டும் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆனால் சில நிமிடங்களில் அந்த வாழ்த்து பதிவை அவர் நீக்கிவிட்டார். இதற்கு காரணம் தெரியாமல் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சமீபத்தில் அவரை ஜோசப் விஜய் என்று சில அரசியல்வாதிகள் விமர்சனம் செய்ததால், தன் மீது கிறிஸ்துவர் என்ற முத்திரை பதியாமல் இருக்கவே அவர் அந்த பதிவை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது