அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘நோட்டா’ என்று வைக்கப்பட்டுள்ளது. நோட்டா என்றாலே சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்பதால் அக்கட்சியினர்களை கடுப்பேற்றவே இப்படியொரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  தமிழக அரசியல்வாதிகளை தாறுமாறாக விமர்சித்த விஜய் தேவரகொண்டா

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளது