நடிகர் ‘அர்ஜீன் ரெட்டி’ புகழ் விஜய்தேவரகொண்ட நடித்து
சமீபத்தில் வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’,’நடிகையர் திலகம்’
ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆனந்த்
சங்கர் இயக்கத்தில் ‘நோட்டா’ படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியிருக்கும்
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஞானவேல்ராஜாவின் ‘கீரின் பிக்சர்ஸ்’ நிறுவனம் இப்படத்தை
தயாரித்துள்ளது.

‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக
அறிமுகமாகிறார், விஜய்தேவரகொண்டா. இந்நிலையில்,
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெளியீடு குறித்து பல வதந்ததிகள் வந்த
நிலையில், படக்குழுவினா் இப்படம் வருகின்ற அக்டோபர்
5-ஆம் தேதி ரிலீஸாகும் என தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ’96’ படம் அக்டோபர் 4-ஆம்
தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதனைத்தொடர்ந்து
இப்படம் ரிலீஸாவது ரசிகர்களிடையே மிகுந்த
உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.