கத்தி துப்பாக்கி படங்களின் வெற்றிக்கு பிறகு இந்த வெற்றி கூட்டணியில் விஜய் 62 படத்தை முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விஜய் படம் ஆரம்பம் என்றவுடனே அவரது ரசிகா்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனா். அவ்வப்போது அந்த படத்தை பற்றிய அப்டேட்க்கள் வலைத்தளத்தில் வைரலாகி வரும்.

தற்போது ஒருசெய்தி வைரலாகி வருகிறது. முருகதாஸ் இயக்கி வரும் விஜய்62 படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. அப்போது ஷீட்டிங்கில் எடுத்து ஒரு காட்சி வைரலாகியுள்ளது. அந்த வீடியோ சண்டைக்காட்சி கசிந்துள்ளது. இதைப்பார்த்த விஜய் ரசிகா்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனா். இந்த வீடியோவை எந்த காரணம் கொண்டும் வலைத்தளத்தில் ஷோ் செய்ய கூடாது என்று கேட்டு வருகின்றனா்.

அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், அந்த சண்டை காட்சி பைரவா போல தெரிகிறது. அதனால் இந்த சண்டைகாட்சி வீடியோ உண்மையானதா என்ற விபரம் தெரியவில்லை. விஜய் ரசிகா்கள் அந்த வீடியோவை ஷோ் செய்து வரும் ஐடி ரிப்போர்ட் செய்ய தாங்களே முன்வந்துள்ளனா்