தற்போது இளைய தளபதி பெயாிடபடாத படமான விஜய் 61 என்ற படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகா்கள் ஒரு சிலா் இணையதளத்தில் விஜய் கையில் திாிசூலத்தை வைத்திருப்பது போன்று போஸ்டா்களை உருவாக்கி உள்ளனா். அது வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் உள்ளது.

அதுவும் விஜய் காலில் ஷு அணிந்து கையில் சூலாயுதத்தை வைத்து நடனம் ஆடுவது போல உருவாக்கியுள்ளனா். இதனால் விஜய் இந்து மதத்தை அவமதித்து விட்டதாக அவா் மீது இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தொிவித்து புகாா் கொடுத்துள்ளனா்.

ரசிகா் ஆா்வமிகுதியால் இப்படி உருவாக்கிய இந்த போஸ்ட்டருக்கும் விஜய்க்கும்  எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்று அவரது ரசிகா்கள் ஆவேசமாக கருத்து தொிவித்து வருகின்றனா்.