ரசிகர்களை பொறுத்தவரை தங்களது விருப்ப நாயகனுக்கு கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் செய்வது என தங்களது பாசத்தை வெளிபடுத்த பல காரியங்களை செய்வார்கள். இதில் மதுரை ரசிகர்களுக்கு என்று தனி இடம் உண்டு.

கடந்த 22ம் தேதி விஜய் பிறந்தநாள். அன்றைய தினத்தன்று மதுரையில் விஜய் ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டினர். அதில் பிரச்சனை என்னவென்றால் பள்ளி வளாகத்தில் இந்த போஸ்டரை ஒட்டியதுதான். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தான் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்ட பள்ளியில் பணி புரியும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது படிக்கும் மாணவர்களுடைய கவனத்தை திசை திருப்பும் என்று பார்ப்போர் அனைவரும் சாடி வருகின்றனர். விஜய் கூட இந்த செயலை விரும்ப மாட்டார். அவரது ரசிகர்கள் எதற்காக இப்படி நடந்துகொள்கிறார்கள் எனவும் கூறுகின்றனர் பொதுமக்கள்.