வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய்க்கு இங்கிலாந்து நாட்டின் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான விருது பட்டியலில் விஜய் பெயரும் உள்ளது. இந்த விருதை விஜய் வெல்ல வேண்டுமானால் வரும் 20ஆம் தேதிக்குள் அதிக வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாக வேண்டும்

விஜய்க்கு இந்த விருது கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் இரவுபகலாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் இந்த இணையதளத்தை வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் வைரஸ் தாக்குதலால் விஜய் ரசிகர்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு கிடைக்க விருது கையைவிட்டு சென்றுவிடுமே என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.