தளபதி விஜயின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சர்க்கார் திரைபடத்தின் திரை விநியோக உரிமையை (தமிழ்/தெலுங்கு) இதுவரை யாரும் எட்டாத விலையில், நர்மதா டிராவெல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் யு.எஸ்.ஏ நிறுவனங்கள் பெற்றுள்ளன. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பான சர்க்கார் திரைப்படம், இன்று வரை எடுத்த திரைப்படங்களிலேயே மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.

சர்க்கார் படத்தின் சில காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் போன்ற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. சூப்பர் டூப்பர் ஹிட் படங்களான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் தளபதி விஜயுடன் கைகோர்க்கும் பிளாக்பஸ்டர் திரைப்படம் இது.

ஆஸ்கார் புகழ் ஏ. ஆர். ரகுமான் இசையில் சர்க்காரின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் பாடல்களாக எட்டு திக்கும் ஒலித்துவருகின்றன.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவன புரோமஷன் அத்துடன் தமிழ்ப்பட ரசிகர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த விஜய் நடிக்கும் படம் என்பதால், சர்க்கார் உலகம் முழுவதும் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது. தளபதி விஜய் செம ஸ்டைலாக நடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பட ரசிகர்களுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் 2018 தீபாவளி டாப் டக்கர் டிரீட்டாக இருக்கும் என்பது உறுதி. இந்தக் கொண்டாட்டத்தில் இணைவதில் மிகுந்த பெருமையடைகிறோம்!