முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கிற்கு நடிகர் விஜயால் வர இயலவில்லை. சர்கார் படத்தின் படப்பிடிப்பில் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை.

இதனையடுத்து சர்கார் படத்தின் அமெரிக்க வேலைகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்னை வந்தடைந்த நடிகர் விஜய், வீட்டுக்குக்கூட செல்லாமல் நேரடியாக மெரினா சென்று கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி இறந்த போது அமெரிக்காவில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நடிகர் விஜய் எவ்வளவோ முயற்சித்தும் உடனடியாக கிளம்ப முடியவில்லை. இதனையடுத்து தற்போது படப்பிடிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து 22 மணி நேரம் பயணம் செய்து இன்று காலை சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து நேராக கார் மூலம் மெரினா வந்த அவர், கலைஞர் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிகாலை நேரமென்பதால் பொதுமக்கள் யாரும் அங்கிருக்கவில்லை. இதே போல தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது நடிகர் அஜித் சென்னையில் இல்லை.

வெளிநாடு ஒன்றில் படப்பிடிப்பில் இருந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இதனையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி மறுநாள் சென்னை வந்தார். அவரும் விமானநிலையத்தில் இருந்து வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக ஜெயலலிதா சமாதிக்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தான் தற்போது நடிகர் விஜய் கலைஞர் கருணாநிதிக்கு செய்துள்ளார்.

Loading...