இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே நல்ல ரிசல்ட்டை பெற்ற நிலையில் தமிழக பாஜக தலைவர்களின் உதவியால் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.250 கோடி வசூல் செய்தது

இந்த நிலையில் இந்த படம் தற்போது விருதுகளையும் குவிக்க தொடங்கிவிட்டது. விஜய்க்கு சிறந்த நடிகர் விருதை விகடன் பத்திரிகை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் அளித்துள்ளது.

வருடத்தின் ஆரம்பத்திலேயே விருதை குவிக்க தொடங்கிவிட்ட இந்த படம், தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை குவிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்