மெர்சல் குழுவினர்களுக்கு தங்கப்பரிசு கொடுத்த விஜய்

இளையதளபதி விஜய் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தங்கத்தில் ஆன பரிசு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தபோது அனைவருக்கும் தங்கத்தில் செயின் பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வரும் விஜய், படக்குழுவினர்கள் 150 பேர்களுக்கு தங்க காயின் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான ‘மெர்சல்’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகி\றார்