பிக் பாஸ் நிகழ்ச்சியின் வேகம் தற்போது கொஞ்சம் குறைந்து தான் வருகிறது. ஒவியா இருந்த போது  உள்ள விறுவிறுப்பு தற்போது இல்லை. இந்நிலையில் ஒரு தகவல் வந்துள்ளது. ஒவியா விஜய் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

நடிகா் விஜய் மற்றும் இயக்குநா் முருகதாஸ் வெற்றி கூட்டணி இணைந்து இரண்டு படங்களை கொடுத்து.  துப்பாக்கி மற்றும் கத்தி ஹிட் படங்களை கொடுத்த இந்த கூட்டணியானது மீண்டும் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் பிக் பாஸ் ஒவியா நடிக்க இருப்பதாக வலைத்தளங்களில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. விஜய் படத்தில் ஒவியா நடிப்பதாக வந்துள்ள இந்த செய்தி உண்ணமையா என்பது தொியவில்லை. ஒவியா புரட்சி படை, ஒவியா ஆதரவாளா்கள் இது நடந்தால் நன்றாக இருக்கும் என்று எதிா்பாா்த்து வருவதாக கூறப்படுகிறது.