தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமியின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.

சென்னை அமைந்தக்கரையில் உள்ள ஒரு சமையல் கலை கல்லூரியில் படிக்கும்போது அபிராமிக்கும் விஜய்க்கும் காதல் ஏற்பட்டது. மகளீன் காதலை மதித்த அபிராமியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தனர். அனால் சம்மதமில்லா பெற்றோர்களை விட்டு வெளீயேறி விஜய் அபிராமியை திருமணம் செய்துகொண்டார். பொதுவாகவே அபிராமி ஆடம்பர பிரியையாகவே இருந்துள்ளார். தன்னை, தன் அழகை அனைவரும் வர்ணனிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகம்.

அவரது நடவடிக்கைகளே வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குழந்தைகளையும் இழந்து, பெற்றோர்களையும் பிரிந்த விஜய் தற்போது எப்படி இருக்கிறார் என்பது அனைவருடைய கேள்வி. அவர் தற்போது அபிராமியின் பெற்றோருடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடனே உள்ளார்.