விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது?

01:28 மணி

Loading...

தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படங்களில் ‘மெர்சல்’ திரைப்படம் உண்மையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என கருதப்படுகிறது. தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், விஜய்யின் 25வது ஆண்டில் வெளிவரும் படம், ஏ.ஆர்.ரஹ்மானின் 25வது ஆண்டில் வெளிவரும் படம், டுவிட்டரில் எமோஜி முதன்முதலாக கிடைத்த தென்னிந்திய படம் ஆகிய பெருமைகள் இந்த படத்திற்கு உண்டு.

இந்த நிலையில் தற்போது மேலும் சிறப்பாக இந்த படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதன்முதலாக ஒரு படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது ‘மெர்சல் படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்திற்கு மட்டும் எப்படி இப்படி புகழ் கிடைக்கின்றது என்று பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மெர்சல் படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படம் வசூலிலும் சாதனை படைக்கும் என கருதப்படுகிறது

(Visited 50 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393