இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட் ஒன்றில் நடந்து வருகிறது.

முதல்கட்டமாக விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்படவுள்ளதாம். ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்ட நிலையில் இந்த பாடல் ‘மெர்சல்’ படத்தில் ரஹ்மான் இசையமைத்த ‘ஆளப்போறான்’ பாடலை விட பிரமாண்டமாக உள்ளதாம்

எனவே இந்த பாடலை இதுவரை இல்லாத வகையில் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளப்போன்றான் தமிழன் பாடலை இந்த பாடல் முந்திவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.