‘மெர்சல்’ படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் விஜய்….

அட்லீ இயக்கி வரும் மெர்சல் படத்தில், நடிகர் விஜய் எந்த பாடலையும் பாடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 வருடங்களாகவே, நடிகர் விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்தப் பாடலும் ஹிட் ஆகி வந்தது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தில் விஜய் எந்த பாடலையும் அவர் பாடப்போவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இத்தனைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். எனவே, விஜய் இப்படத்தில் ஒரு பாடலேனும் பாடுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஜி.வி.பிரகாஷ், கைலாஷ், ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் மட்டுமே இப்படத்தின் பாடலை பாடியுள்ளனர். எனவே, இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 20ம் தேதி நடக்க  இருப்பது குறிப்பிடத்தக்கது.