Actor vijay shooting spot – தளபதி 63 படப்பிடிப்பில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் சிரித்துப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையிலேயே நடைபெற்று வருகிறது. இதுவரை 3 ஷெட்டியூல் முடிந்து விட்டது. தற்போது 4வது ஷெட்யூல் சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு, பிரம்மாண்டமான கால்பந்து விளையாட்டு மைதானம் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் சந்திப்பதற்காக ரசிகர்கள் பலர் தினமும் இந்த இடத்தில் குவிகின்றனர். அப்படி தன்னை காண வந்த ரசிகர்களிடம் விஜய் உரையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.