விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகிவரும் படம் ‘மெர்சல்’. இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற ஆக.20-ந் தேதி பிரம்மாண்டமான வெளியிடவிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற ஒரேயொரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது.

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இப்பாடலை டிரெண்டிங்கில் கொண்டுவந்து மெர்சலாக்கினர். இந்நிலையில், கடந்த வாரம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் முதலிடத்தை ‘மெர்சல்’ இடம்பிடித்துள்ளது. இதை கூகுள் நிறுவனமே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

‘மெர்சலின்’ முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது பாடலையும் கூடிய விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.