1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு

04:30 மணி

Loading...

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மெர்சல் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் சாதனைகளை பதிவு செய்ய துவங்கியது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது.

விவேகம் டீசர் 12 மணி நேரத்தில் செய்த சாதனையை மெர்சல் 7 மணி நேரத்தில் முறியடித்தது.இதுவரை, 70.18 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இது படக்குழுவினரை சந்தோசப்படுத்தினாலும் இன்னொரு விசயம் அவர்களை கவலை அடைய வைத்துள்ளது. 1.57 லட்சம் பேர் இந்த வீடியோவை டிஸ் லைக் செய்துள்ளனர். இது படக்குழுவினரை கவலை அடைய வைத்துள்ளது. டிஸ்லைக் செய்தவர்களில் பெரும்பாலானோர் அஜீத் ரசிகர்கள் எனக் கூறப்படுகிறது.

(Visited 43 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com