அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் மெர்சல்.
இப்படத்தின் டீசர் வீடியோ கடந்த 21ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த டீசரை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

மேலும், யூடியூபில் எந்த படமும் செய்யாத சாதனையை இப்படத்தின் டீசர் பெற்றுள்ளது. அதாவது தொடக்கம் முதலே மெர்சல் டீசர் வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. மிகவும் குறிய காலத்திற்குள், அதாவது, வெளியான 5 நாட்களில் 2 கோடி பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. மேலும், 8 லட்சத்து 47 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். யூடியூபில் இவ்வளவு வரவேற்பை பெற்ற முதல் விஜய் பட வீடியோ மெர்சல் பட டீசர்தான் என தெரியவந்துள்ளது.