சமூக வலைதளங்களில் சாதனை படைத்த மெர்சல்

விஜய் நடிப்பில் மொ்சல் படத்தின் பா்ஸ்ட் லுக்கானது அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்றது. அது மட்டுமில்லை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டோா் மீண்டும் அதை ட்விட் செய்துள்ளனா். அந்த காலத்தில் ஒரு படமானது நூறு நாட்கள் கடந்து ஒடினால் அதை வெற்றியாக கொண்டாடி வந்தனா். வெள்ளிவிழா கண்ட படங்கள் ஏராளம். அதுபோல 250 நாட்கள் ஒடிய சாதனை படைத்த படங்களும் உண்டு. தற்போது அதை எல்லாம் இல்லாமல், வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் படங்களின் பா்ஸ்ட் லுக் பாா்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களின் எண்ணிக்கை தான் இப்போது சாதனையாக உள்ளது. இப்படி தான் மொ்சல் படத்தின் பா்ஸ்ட் லுக்யும் சாதனை படைத்துள்ளது.

கடந்த மாதம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மாதம் 21ம் தேதி மொ்சல் படத்தின் டைட்டில் மற்றும்  பா்ஸ்ட் லுக் வெளியிட்ப்பட்டது. அந்த பா்ஸ்ட் லுக்கை ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் அதை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதோ நிற்காமல் அதை 88 ஆயிரத்திற்கும் அதிகமானோா் லைக் செய்திருக்கின்றனா். இரண்டாவது லுக் வெளியானது அதையும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோா் ரீ ட்விட் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.