வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22

மோகன்லால் மகனுக்கு உதவும் விஜய் பட டைட்டில்

12:40 மணி

தளபதி விஜய் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் ‘ஜில்லா’ படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகும் படத்திற்கு விஜய் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளம் உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. இந்த படத்தின் இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ப்ரணவ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கு விஜய், த்ரிஷா நடித்த ‘ஆதி’ என்ற படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஜீத்துஜோசப் அவர்களிடம் உதவி இயக்குனராக சிலகாலம் பணிபுரிந்த ப்ரணவ், தற்போது அவர் இயக்கும் படத்தின் நாயகனாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

(Visited 61 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393