பொங்கல் அல்லதி தீபாவளி என்றாலே பண்டிகை மட்டுமின்றி விஜய் படங்களின் ரிலீசும் இருக்கும் என்பதை கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம். கடந்த தீபாவளி தினத்தில் கூட விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் ரிலீசாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது

இந்த நிலையில் வரும் 2018ஆம் ஆண்டின் பொங்கல், தீபாவளி இரண்டுமே விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்-முருகதாஸ் இணையும் ‘தளபதி 62;’ படம் வெளியாவது தெரிந்ததே. ஆனால் 2018 பொங்கல் அன்று விஜய் ரசிகர்களுக்கு என்ன விசேஷம் என்ற கேள்வி எழுகிறதா?

அன்று தான் ஜீ தொலைக்காட்சியில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2018ஆம் ஆண்டு பொங்கலும், தீபாவளியும் விஜய் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது