Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மீண்டும் இணையும் விஜய் முருகதாஸ் கூட்டணி…

மீண்டும் இணையும் விஜய் முருகதாஸ் கூட்டணி…

 

 

      விஜய் நடிப்பில் தீபாவளி அன்று சரவெடியாய் வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தின் நடிகை, இசையமைப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.