சர்க்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதற்காக மிக வேகமாக பட ஷூட் முடிக்கப்பட்டு ,அதன் டெக்னிக்கல் வேலைகள் நடைபெற்று வருகிறது. விஜய், பழ கருப்பையா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முருகதாஸ் இயக்குகிறார் சமீபத்தில்தான் இப்படத்தின் புகைப்படங்கள் சிறிது சிறிதாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில நாட்களில் சிங்கிள் டிராக் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்க்கார் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அது முட்டுக்காட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.