இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஸ்டார் நைட் நிகழ்ச்சி மலேசியாவில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளையதளபதி விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் கூறியுள்ளார். அதேபோல் அஜித்தையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.