ஈசிஆர் பண்ணை வீட்டில் ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

01:30 மணி

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் சென்னையில் நடந்து வரும் நிலையில் இன்று சென்னை ஈசிஆரில் உள்ள ‘விஜய் மக்கள் இயக்கம்’ அலுவலகத்தில் விஜய் ரசிகர்களுடன் இன்று திடீர் ஆலோசனை செய்து வருகிறார்.

Loading...

ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போட்டோஷூட் நிகழ்ச்சியில் மட்டுமே விஜய் கலந்து கொண்டார் என விஜய் ரசிகர் மன்றத்தின் தரப்பில் தெரிவித்திருந்த போதிலும், அவர் முக்கிய ஆலோசனையில் ரசிகர்களுடன் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அவர் எடுக்கவுள்ள ஒரு அதிரடி திட்டத்திற்கான தொடக்கமே இன்றைய ஆலோசனை என்றும் கூறப்படுகிறது.

வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் படுஜாலியாக இன்னோவா காரில் வந்திறங்கிய விஜய்யை ரசிகர்கள் பலத்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் புன்சிரிப்புடன் ஒவ்வொரு ரசிகருடனும் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும், பல ரசிகர்களின் கையை பிடித்து அவர்களிடன் அன்புடன் நலம் விசாரித்ததாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

(Visited 15 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393