இம்மாதம் 22ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரது ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடுவார்கள். ஏழைகளுக்கு உதவிகள், அன்னதானம் பல அவரது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு ஆடம்பர விழாக்கள் வேண்டாம் என்றும், விளம்பரங்கள் இல்லாமல் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றும் தலைமை மன்றத்திலிருந்து தகவல்கள் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  டுவிட்டரில் நுழைந்த கரண்

காரணம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வு முடிவால் மாணவிகள் தற்கொலை போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் இந்த நேரத்தில் ஆடம்பர விழா தேவையில்லை என விஜய் தரப்பில் முடிவு செய்யப்படுள்ளது. மேலும் தனது பிறந்த நாள் அன்று படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருப்பதால் அன்று தன்னை பார்க்க யாரும் சென்னை வரவேண்டாம் என்று தகவல்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது