நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் உள்ள  தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று சென்றிருந்தபோது விஜய்யை பார்க்கவும் அவரை புகைப்படம் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் குவிந்தனர் இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நேரடியாக திருமண மண்டபத்திற்கு செல்வதை தவிர்த்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து ஆசிர்வதிக்கலாம் வாழ்த்தலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு முன் விஜய் மூன்று வருடங்களுக்கு முன் விழுப்புரத்தில் ஒரு திருமண வீட்டில் பின்புறம் தப்பி சென்றது நினைவிருக்கலாம்.