தமிழக அரசியலில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சி என்று அனைவரும் கூறுவர். அவரை போன்று சுய நலமில்லாத ஒரு தலைவர் தமிழகத்தில் இன்று வரை எவரும் இல்லை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்த காமராஜர் என்று அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் தனது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்: ஆனால் அஜித் தான் சர்வைவா- கஸ்தூரி டுவிட்

ரஜினி,கமல், விஜயகாந்த என நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் விஜயும் இணைவார் என்று அனைவரும் எதிர்பார்த்துவருகின்றனர். காரணம் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அரசியலை மையபடுத்தியே இருக்கும். விஜய் ரசிகர்களும் பரபரப்பாக ஏதாவது போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்புவார்கள். அந்த வகையில் தற்போது அதாவது ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரில், நேற்றைய தமிழகம் காமராஜர் கையில், நாளைய தமிழகம் மக்கள் இயக்க தலைவர் கையில்’ என்ற வரிகளுடனும் நடிகர் விஜயுடன் காமராஜர் பேசிக்கொண்டிருப்பது போன்ற் புகைப்படத்தையும்
இடம்பெற செய்துள்ளனர். இதனை கண்ட பலர் இதெல்லாம் உங்களளுக்கு ஓவரா தெரியலையா என்று கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றன்ர்.

இதையும் படிங்க பாஸ்-  பிரியங்கா சோப்ராவுடன் நடிக்க விரும்பும் பிரபல ஹாலிவுட் நடிகை