விவேகத்தை விட புலி எவ்வளவோ மேல்?- அடப்பாவிகளா


அஜித் நடிப்பில் இன்று வெளியான விவேகம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இதனால் படம் குறித்த தெளிவான விமர்சனம் இது வரை இல்லை.

இந்த நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்று புலியை விட குறைவான ரேட்டிங்கை விவேகம் படத்திற்கு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘புலி’.  ஃபேண்டசி படமான இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். குழந்தைகளை குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்துக்கு பிரபல இணையதளமான ‘பிகைண்ட்வுட்ஸ்’, 2.75 ரேட்டிங் கொடுத்தது.

தற்போது அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் இன்று வெளியான படம் ‘விவேகம்’.  இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகும் அஜித் படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றன. இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியுள்ள  பிகைண்ட்வுட்ஸ் இணையதளம் 2.25 ரேட்டிங்கே கொடுத்துள்ளது. இதனை பார்க்கையில் புலியைவிட ‘விவேகம்’ படுமொக்கையாக இருப்பதாக அந்த இணையதளம் முடிவு செய்துள்ளது.