Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தரும் விஜய் சேதுபதியும் இணைந்த புதிய படம்

ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தரும் விஜய் சேதுபதியும் இணைந்த புதிய படம்

வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களின் இயக்குனர் விஜய் சந்தர் .இரண்டு படங்களும் சுமாரான படங்களே. இருப்பினும் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் செல்லப்பிள்ளையாக  ஸ்கெட்ச் பட இயக்குனர் விளங்குகிறார்.

விஜய் சேதுபதியுடன் உள்ள நட்பில் அடுத்த விஜய் சேதுபதியின் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார்.

பிப்ரவரி 2019ல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை  பைரவா படத்தை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன் தயாரிக்க உள்ளது.

இது ஒரு பக்கா கமர்ஷியல் மாஸ் படம் என்று விஜய் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பிரவீன் கே.எல். கவனிக்க உள்ளார்.