இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. இவை இந்த படம் எப்படிப்பட்டது என்பதை நம்மை யூகிக்க வைக்கின்றது. இந்த படத்தின் கதை தளம் பெரிய நகரம் ஒன்றில் நடக்கிறது. காரணம் விஜய் புகைப்படத்திற்கு பின்னால் மிகப்பெரிய கட்டிடங்கள் இருக்கின்றது.

விஜய் அணிந்துள்ள கை கடிகாரம் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. எனவே படத்தில் விஜயின் கேரக்டர் மாஸ்ஸாக முக்கியத்துவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஸ்டைலாக சால்ட் அன் பெப்பர் கெட்டப்பில் இருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சால்ட் அன் பெப்பரில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

காதில் கடுக்கன், இடது கையில் லைட்டர், வாயில் சிகரெட் என போஸ் கொடுத்துள்ள விஜய் இந்த படத்தில் அதிரடியான காட்சிகளில் நடித்திருக்க வாய்ப்புள்ளது. சமீப காலமாக விஜய் இதுமாதிரியான கெட்டப்பில் நடித்ததில்லை.

இந்த படம் அரசியல் சம்மந்தப்பட்ட படம் என தொடக்கத்தில் இருந்தே ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்கேற்றார்போல படத்திற்கு சர்கார் என பெயர் வைத்துள்ளனர். சர்கார் என்றால் இந்தியில் அரசாங்கம் என்று பொருள். எனவே இது நிச்சயம் அரசியல் சம்மந்தப்பட்ட கதை என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தளபதி விஜய் அரசாங்கம் என பொருள்படும்படி உள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.