விஜயின் சர்கார் சிங்கிள் டிராக் விரைவில்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். பாரின் ரிட்டர்னாக இந்தியா வரும் விஜய் இங்கு வந்து இந்தியாவில் நடக்கும் அரசியல் ரீதியான அவலங்களை கண்டு பொங்கி எழுந்து அரசியல்வாதிகளை எதிர்ப்பதுதான் கதை. அமெரிக்காவில் இப்படப்பிடிப்பு நடந்துள்ளது.

ராதாரவி, பழ.கருப்பையா, வில்லன் வேடத்தில் நடிக்கின்றனர் இப்படம் தீபாவளிக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை அக்டோபர் 2ல் வெளியிட இருக்கும் நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று செப்டம்பரில் வெளியிட இருப்பதாக செய்தி கசிவதால் இளைய தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.