இன்னும் மூன்று நாளில் ஒரு இயக்குனரின் கனவுகதையை இந்த உலகம் காணப்போகிறது. அதுவும் நடிகர் கமலை மனதில் வைத்து  பார்த்து பார்த்து உருவாக்கிய அந்த கதையில் வேறு ஒரு நாயகனை வைத்து வெற்றிகரமாக  இயக்கி விட்டார் அந்த இயக்குனர் .

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் கதை தான் நாம் சொல்ல வரும் கதை. இதில் கமல் தான் நடித்து இருக்க வேண்டியதாம். பாலாஜி தரணிதரன் முதலில் சீதக்காதி பட கதையை கமலிடம் தான் கூறினாராம். அதை கேட்டு கமல், ஆஹா அருமை என  பாராட்டினாலும் ஏற்கவில்லையாம். இதனால் பல மாதங்களுக்கு பிறகு பாலாஜி தரணி, நடிப்பில் திறமைசாலி என இன்றைய சமூகத்தால் கொண்டாடப்படும்  விஜய் சேதுபதியை வைத்து தனது கனவு கதையை தற்போது முடித்துவிட்டார். அதனை இன்னும் 3 நாளில் உலகமே காணப்போகிறது. மிகச்சிறந்த நடிகராக போற்றப்படும் விஜய் சேதுபதிக்கு இப்படம் மிகப்பெரிய மைல்கல் என கோலிவுட்டில் சொல்லி கொள்கிறார்கள்.