விஜய்சேதுபதி படத்தை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதி தற்போது வேறெந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிஸியாக உள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா மற்றும் நயன்தாரா  நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் செய்வதாக இருந்தது. நானும் ரௌடிதான் வெற்றியை அடுத்து விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்க ஒப்புகொண்டார். 20  நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சில பிரச்னைகளால் படம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அந்த கதையை தூசி தட்டி, சில மாறுதல்கள் செய்து சிவகார்த்திகேயனை நாடினார். கதை பிடித்துப் போகவே சிவகார்த்திகேயனும் நடிக்க ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கிரீன் ஸ்டூடியோ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இசை வழக்கம்போல அனிருத். சன் டீவி இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளது.