ஜோடியில்லாத விஜய் சேதுபதி

தென்மேற்கு காற்று படத்தில் நாயகனாக வந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய எதாா்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளாா். தற்போது இவா் நடிப்பில் வெளிவந்த கவண் படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் பத்திாிக்கையாளராக நடித்து உள்ளாா். இதில் இவாின் நடிப்பு வித்தியாசமான ரோலாக அமைந்துள்ளது. இப்போது இவாின் கைவசம் பல படங்கள் இருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தின் இயக்குநா் பாலாஜி இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாா். அய்யா என்ற கதாபத்திரத்தில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

இந்த படத்திற்கு சீதக்காதி என பெயாிட்டு உள்ளனா் படக்குழு. விஜய் சேதுபதி இந்த படத்தில் நாடக கலைஞராக நடிகராக நடிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருகிறது.அது மட்டுமல்ல!! விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தில் எத்தனை நாயகிகள் நடிக்கிறாா்கள் தொியுமா? ரம்யா நம்பீசன் உள்ளபட 5 முக்கிய நாயகிகள் நடித்து கலக்க இருப்பதாக படக்குழு தொிவிக்கிறது. அப்படியா? விஜய்சேதுபதிக்கு 5 ஹீரோயின்களுடன் நடிக்ககிறரா? அது தான் இல்லை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியே கிடையாது என்பது தான் முக்கியமான செய்தி. இந்த 5 நாயகிகள் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை.